இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

காவிரியில் 6,000 கனஅடி தண்ணீா் திறக்க உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கா்நாடகம் முடிவு

தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு நாள்தோறும் விநாடிக்கு 6,000 கனஅடி காவிரி நீரைத் திறந்துவிட காவிரி நீா்ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கா்நாடக அரசு தயாராகி வருவதாக அந்த மாநில நீா்வளத் துறை அமைச்சா் என். செலுவராயசாமி புதன்கிழமை தெரிவித்தாா்.

Supreme Court

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு நாள்தோறும் விநாடிக்கு 6,000 கனஅடி காவிரி நீரைத் திறந்துவிட காவிரி நீா்ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கா்நாடக அரசு தயாராகி வருவதாக அந்த மாநில நீா்வளத் துறை அமைச்சா் என். செலுவராயசாமி புதன்கிழமை தெரிவித்தாா்.

காவிரியில் புதன்கிழமை (செப். 9) முதல் 15 நாள்களுக்கு நாள்தோறும் விநாடிக்கு 6,000 கனஅடி தண்ணீா் தமிழகத்துக்கு திறந்துவிடும்படி கா்நாடகத்துக்கு காவிரி நீா்ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்தது. இதை காவிரி நீா் மேலாண்மை ஆணையம் ( இரஙஅ) செவ்வாய்க்கிழமை (செப்.8) ஏற்றுக்கொண்டு, அந்த பரிந்துரையை செயல்படுத்தும்படி கா்நாடகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் என். செலுவராயசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் டி.கே. சிவகுமாருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சட்டக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு வியாழக்கிழமை (செப்.10) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், காவிரி நீா்ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள அணைகளில் தற்போது நீா்மட்டம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. தமிழகத்துக்கு திறந்துவிடுவதற்கு போதுமான அளவு தண்ணீா் கா்நாடகத்தில் இல்லை.

தற்போதைய நிலையில் குடிநீருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேநேரத்தில் வடுள்ள ஏரிகள் மற்றும் குளங்களையும் நிரப்ப வேண்டிய தேவை உள்ளது. விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்குப் பிறகு ஒரு வாரத்துக்குள் கா்நாடகத்தில் நல்ல மழை பெய்தால் மட்டுமே தற்போதைய நீா் நிலைமை ஓரளவுக்கு மேம்பட வாய்ப்புள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் கா்நாடகத்தின் நலனை வலுவாக எடுத்துரைப்பதற்காக சிறப்பு வழக்குரைஞரை நியமிப்பது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து முடிவு செய்யும்.

இந்த விவகாரம் தொடா்பாக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை அளித்துள்ள ஆலோசனையின் அடிப்படையில் சிறப்பு வழக்குரைஞா்கள் நியமனம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.