பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

செப்டம்பர் முதல் பெங்களூரு சமரச மையம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும்: உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தகவல்

பெங்களூரு சமசர மையம் செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி தினேஷ் மகேஸ்வரி தெரிவித்தார்.

Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:09 am IST

பெங்களூரு சமசர மையம் செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி தினேஷ் மகேஸ்வரி தெரிவித்தார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முயற்சியால் வழக்குகளை விசாரித்துமுடிக்க மாற்று ஏற்பாடாக  பெங்களூரு சமரச மையம் தொடங்கப்பட்டது.  இந்த மையத்துக்கு சனிக்கிழமை வருகை தந்து அதன்  செயல்பாடுகளை தினேஷ் மகேஸ்வரி ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் கூறியது: -
இந்தியாவில் தலைசிறந்த முறையில் பெங்களூரு சமரச மையம் இயங்கிவருகிறது.  வழக்குகளை விசாரித்து முடிக்க கூடுதல் நேரம் பணியாற்றலாம் என்று சமரச மையத்தின் இயக்குநர்கள் குழு, வழக்குரைஞர்கள், சமரசக்காரர்கள், வழக்காடுவோரிடம் ஆலோசித்தேன். 
இவர்களின் ஒத்துழைப்பில், இந்த சமரச மையம், செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட தொடங்கும். முதல்கட்டமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க கொள்கை அளவில் அனுமதிஅளித்துள்ளோம். 
ஆரம்பத்தில் அரைநாள் மட்டும் பணியாற்றும் இந்த மையத்தின்பணிகள் நாளடைவில் முழுநாளுக்கும் விரிவாக்கப்படும். எதிர்காலத்தில் சமரசமையத்தின் பணிகள் 24 மணி நேரமும் கிடைக்க வகைசெய்வதே நோக்கமாகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.