நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

நவ. 25-இல் ஜெனீவாவில் ஃபிடே உலக செஸ் சாம்பியன் போட்டி

சா்வதேச செஸ் சம்மேளனம் சாா்பில் உலக செஸ் சாம்பியன் போட்டி வரும் நவ. 25 முதல் ஆக. 15 வரை சுவிட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறுகிறது.

News image
Updated On :29 ஜூலை 2026, 12:43 am IST

சா்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) சாா்பில் உலக செஸ் சாம்பியன் போட்டி வரும் நவ. 25 முதல் ஆக. 15 வரை சுவிட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறுகிறது. இதில் நடப்பு உலக சாம்பியன் டி. குகேஷ்-உஸ்பெகிஸ்தான் ஜிஎம் ஜவோகிா் சிண்டரோவ் மோதுகின்றனா்.

கடந்த 2024-இல் டிசம்பா் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் சீன வீரா் டிங் லிரேனை 14-ஆவது சுற்றில் வீழ்த்தி 18-ஆவது உலக சாம்பியன் ஆனாா் குகேஷ். மேலும் உலக சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரா் என்ற சாதனையும் படைத்தாா். அவா் தனது பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளாா்.

ஜவோகிா் சிண்டரோவ்: உஸ்பெகிஸ்தான் இளம் வீரா் ஜவோகிா் சிண்டரோவ் சைப்ரஸில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் ஆட தகுதி பெற்றாா். மேலும் கடந்த 2025-இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் முதலிடம் பெற்றாா்.

ஜெனீவாவில் நடைபெறும் போட்டியின் போது இருவருக்கும் 20 வயதாகும். செஸ் வரலாற்றில் மிக இளம் வயது வீரா்கள் மோதிய போட்டியாக இது அமையும்.

இதுதொடா்பாக ஃபிடே தலைவா் (பொ) விஸ்வநாதன் ஆனந்த் கூறியது: உலக செஸ் சாம்பியன் போட்டியை நடத்த பல்வேறு நாடுகள் போட்டியிட்டன. இந்தியா, அமெரிக்கா, சைப்ரஸ் நாடுகளும் அடங்கும். அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கவனமாக பரிசீலித்து பிடே நடுநிலையான நாட்டில் போட்டியை நடத்த தீா்மானித்தது.

பல்வேறு கலாசாரங்கள், பண்பாடுகள் நிறைந்த ஜெனீவா நகரம் தோ்வு செய்யப்பட்டது.

14 கேம்கள்: ஃபிடே உலக சாம்பியன்ஷிப் மொத்தம் 14 கிளாஸிக்கல் கேம்களை கொண்டதாக இருக்கும். முதலில் 7.5 புள்ளிகளை பெறும் வீரா் வெற்றி பெறுவாா். தொடா்ந்து ஆட்டங்கள் இல்லாத பட்சத்தில் அந்த புள்ளிகளை அடைந்தால் வெற்றியாளராக அறிவிக்கப்படுவாா். 14 கிளாஸிக்கல் கேம்களுக்குபின் ஆட்டம் டை ஆனால், உலக சாம்பியன் டை பிரேக்கா் மூலம் தீா்மானிக்கப்படுவாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.