நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

உலக செஸ் சாம்பியன்ஷிப்பை குகேஷ் தக்கவைப்பாரா? இறுதிப் போட்டிக்கான இடம், தேதிகள் அறிவிப்பு!

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2026 இறுதிப் போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

குகேஷ் - சிண்டாரோவ் - படம்: எக்ஸ் / ஃபிடே செஸ்.

Updated On :28 ஜூலை 2026, 7:51 pm IST

செஸ் உலக சாம்பியன்ஷிப் 2026 இறுதிப் போட்டி ஸ்விட்சர்லாந்து ஜெனிவாவில் நடைபறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் டி. குகேஷ் மற்றும் ஜாவோகிர் சிண்டாரோவ்  மோதுகிறார்கள்.

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் மோதும் இருவருக்குமே 20 வயது என்பதால், யார் வென்றாலும் செஸ் வரலாற்றில் சாதனையாகவே பார்க்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, குகேஷ் 18 வயதில் வென்று முதலிடத்தில் இருக்கிறார்.

இந்தப் போட்டியில் ஜாவோகிர் சிண்டாரோவ் வென்றால் இரண்டாவது இளம் உலக சாம்பியன் என்ற பட்டத்தைப் பெறுவார். குகேஷ் வென்றால் முதல் இரண்டு இடத்தையும் அவரே பிடிப்பார் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஜெனிவா நகரத்தில் இறுதிப் போட்டி வரும் நவ.25 முதல் டிச,15 வரை போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஃபிடேவின் இடைக்காலத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் இது குறித்து கூறியுள்ளதாவது:

இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகள் இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தன. பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு ஒரு சமமான மண்ணில் நடத்தலாம் என ஃபிடே முடிவெடுத்துள்ளது. ஜெனிவா நகரத்துக்கு வரலாற்றுப் பாரம்பரியமும் இருக்கிறது. ஸ்விட்சர்லாந்து மக்கள் இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசிக்க அற்புதமான ஒரு வாய்ப்பாக அமையும் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, 2024ல் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் இளம் வயதில் உலக சாம்பியன் ஆனார். உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிண்டாரோவ் ஃபிடே கேண்டிடேட்ஸ் 2026 தொடரை வென்று அசத்தினார்.

இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி 14 கிளாசிக்கல் ஆட்டங்களைக் கொண்டதாக இருக்கிறது. முதலில் யார் 7.50 புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 14 போட்டிகளிலும் சமமாக இருந்தால், டை பிரேக்கரில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுமென ஃபிடே அறிவித்துள்ளது.

Summary

Will Gukesh retain the World Chess Championship? Venue and dates for the final announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.