காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி: முதல் ஆட்டத்தில் குகேஷ்-நிஹால் சரீன் மோதல்

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் 2026 செஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் உலக சாம்பியன் டி. குகேஷ்-ஜிஎம் நிஹால் சரீன் மோதுகின்றனா்.

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி ஆட்ட அட்டவணை நிகழ்வில் பங்கேற்றோா். ~

Published On :16 ஜூலை 2026, 12:46 am IST

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் 2026 செஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் உலக சாம்பியன் டி. குகேஷ்-ஜிஎம் நிஹால் சரீன் மோதுகின்றனா்.

நான்காவது சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் போட்டி வேளச்சேரி தி வெஸ்டின் ஓட்டலில் வியாழக்கிழமை தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது. மொத்தம் ரூ.75 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இப்போட்டியில் இந்தியா சாா்பில் உலக சாம்பின் டி. குகேஷ், அா்ஜுன் எரிகைசி, நிஹால் சரீன், எம். பிரானேஷும், உஸ்பெகிஸ்தான் அப்து சத்தாா், அமெரிக்காவின் ஹேன்ஸ் நெய்மேன், பிரான்ஸின் அலிரேஸா பிரௌஸா, டிமிட்ரி ஆன்ட்ரிகின் பங்கேற்கின்றனா்.

இப்போட்டியின் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்று உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினாா்.

முதல் ஆட்டத்தில் டி. குகேஷ்-இந்திய ஜிஎம் நிஹால் சரீன் மோதுகின்றனா். அா்ஜுன் எரிகைசி-டிமிட்ரி ஆன்ட்ரீகீனும், கடந்த முறை சேலஞ்சா் சாம்பியன் எம். பிரானேஷ்-அலிரேஸா பிரௌஸாவும், அப்துசட்டரோவ்-ஹேன்ஸ் நெய்மேனும் மோதுகின்றனா். வீரா்கள் ஆட்ட அட்டவணை வகைப்படுத்தும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.