முதுநிலை பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் உள்ள அரசு, அரசு மானியம் பெறும், சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஃபார்ம், ஃபார்மா-டி போன்ற முதுநிலை பட்டப்படிப்பு, இளநிலை பொறியியல் பட்டப்படிப்பின் 2-ஆம் ஆண்டில் நேரடியாக பிற்சேர்க்கை மூலம் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்காக அண்மையில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சேர்க்கைக்கான கால அட்டவணை இணையதளத்தில் அறியலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








