நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

"ஹஜ் மாளிகைக்கு திப்புசுல்தான் பெயர் வைத்தால் தீவிர போராட்டம்'

ஹஜ் மாளிகைக்கு திப்புசுல்தான் பெயர் வைத்தால் தீவிர போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் பேரவைத் தலைவரும், குடகு மாவட்டத்தின் பாஜக எம்.எல்.ஏ.வுமான கே.ஜி.போப்பையா தெரிவித்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

ஹஜ் மாளிகைக்கு திப்புசுல்தான் பெயர் வைத்தால் தீவிர போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் பேரவைத் தலைவரும், குடகு மாவட்டத்தின் பாஜக எம்.எல்.ஏ.வுமான கே.ஜி.போப்பையா தெரிவித்தார்.
கர்நாடக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பெங்களூரில் ஹஜ் மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. ஹஜ் மாளிகைக்கு திப்புசுல்தான் பெயரை சூட்டுமாறு இஸ்லாமிய சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்போவதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, திப்புசுல்தான் பெயரை ஹஜ் மாளிகைக்கு சூட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக மாநிலத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா, ஹஜ் மாளிகைக்கு புதிய பெயரை சூட்ட வேண்டிய அவசியமில்லை. ஹஜ் மாளிகைக்கு பெயர் சூட்டியே ஆகவேண்டுமென்றால், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை வைக்கலாம் என்று ஆலோசனை வழங்கியிருந்தார். 
இதே கருத்தை, திப்புசுல்தானுக்கு கடும் எதிர்ப்பு நிலவும் குடகு மாவட்டத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. கே.ஜி.போப்பையாவும் வலியுறுத்தியிருக்கிறார். அவர் மேலும் கூறியது: பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கூறியிருப்பதுபோல, ஹஜ் மாளிகைக்கு அப்துல் கலாம் பெயரை சூட்டலாம். ஒருவேளை திப்புசுல்தான் பெயரை ஹஜ் மாளிக்கைக்கு சூட்டினால், மாநிலத்தில் மதக் கலவரங்கள் வெடிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், பாஜக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.