பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின்(பிஎம்டிசி) சார்பில் ஆரம்ப, உயர்நிலைப்பள்ளி, பியூ கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைக் கட்டண பேருந்து அட்டையை(பஸ் பாஸ்)பெற இணையதளத்தின் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாணவர் சமுதாயத்தின் நலன் கருதி, ஆரம்ப, உயர்நிலைப்பள்ளி, பியூ கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் சலுகைக் கட்டண பேருந்து அட்டையை வழங்கி வருகிறது. அச்சிடப்பட்ட பேருந்து அட்டையைப் பெற மாணவர்கள் கழகத்தின் அலுவலகங்களுக்கு அடிக்கடி வந்துபோக நேரும். மேலும், 4-5 சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அளிக்க வேண்டியிருக்கும். பேருந்து அட்டைகளை வழங்கும் நடைமுறைகளை எளிமையாக்க முடிவுசெய்துள்ள போக்குவரத்துக் கழகம், தற்போது மாணவர்களின் வீட்டு வாசலுக்கே அவற்றைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. தானியங்கி வழியே பேருந்து அட்டைகளை மாணவர்களின் வீட்டுக்கே அனுப்பி வைக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. பேருந்து அட்டை பெற இணையதளம் அல்லது ஊடாடும் குரல் பதில்மொழி (ஐவிஆர்) மூலம் விண்ணப்பிக்கலாம். ஆரம்ப, உயர்நிலை, பியூ கல்லூரி மாணவர்கள் பள்ளிகள், பியூ கல்லூரிகள் அல்லது இணையதளம் அல்லது ஐவிஆர் முறையில் விண்ணப்பிக்கலாம். ஆனால், கல்லூரி மாணவர்கள் இணையதளம் அல்லது ஐவிஆர் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். 161 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். இதுதவிர, www.mybmtc.com என்ற இணையதளத்திலும் பதிவிடலாம். மின்-விண்ணப்பங்கள் வழியே விண்ணப்பங்களை செலுத்தியிருந்த மாணவர்களின் முகவரிக்கு பேருந்து அட்டை ஸ்மார்ட்கார்டு வடிவத்தில் அனுப்பி வைக்கப்படும். அஞ்சலரிடம் பேருந்துக்கான சலுகைக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, ஸ்மார்ட்கார்டை பெற்றுக்கொண்டு, அதைப் பயன்படுத்தி பேருந்தில் பயணிக்கலாம்.
விண்ணப்பங்களைப் பதிவிட்டு, அட்டை கிடைக்காதவர்கள் செப்.30-ஆம் தேதி வரை ஒப்புகைச்சீட்டுடன் பயணிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.mybmtc.com
என்ற இணையதளத்தை காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சித்தார்த் மகாதேவன் அரைசதம்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


