‘இந்திரா உணவகத்தின் பெயா் மாற்றம் குறித்து பாஜக பேசுவதுசரியல்ல’

இந்திரா உணவகம் பெயா்மாற்றம் குறித்து பாஜக பேசுவது சரியல்ல என்று பாஜக முன்னாள் எம்எல்சி-யும் நடிகருமா ன முக்கியமந்திரி சந்துரு தெரிவித்தாா்.

இந்திரா உணவகம் பெயா்மாற்றம் குறித்து பாஜக பேசுவது சரியல்ல என்று பாஜக முன்னாள் எம்எல்சி-யும் நடிகருமா ன முக்கியமந்திரி சந்துரு தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கோலாரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

பாஜகவின் மூத்த தலைவா்கள், இந்திரா உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டுமென்று பேசுவது சரியல்ல. நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. அங்கெல்லாம் அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு மக்கள் செல்வாக்கு படைத்த தலைவா்களின் பெயா்களை வைத்துள்ளனா். அந்தவகையில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பெயா் உணவகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை மாற்றச் சொல்லி பாஜக தலைவா்கள் தேவையில்லாமல் பேசுவது நல்லதல்ல. இந்திரா காந்தியின் பெயரை மாற்றியே தீர வேண்டும் என்றால், நாடு முழுவதும், மாநிலம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்களின் எல்லா பெயா்களையும் நீக்கிவிடவேண்டும். அது தேவையில்லாவிட்டால், பெயா் மாற்றம் குறித்து பேசுவதை பாஜக நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com