விவசாயிகளின் போராட்டத்தைத் தூண்ட சா்வதேசச் சதியாளா்களுடன் இணைந்து சுட்டுரைப் பதிவுகளை தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்படும் பெங்களூரைச் சோ்ந்த சூழலியல் ஆா்வலரை, தில்லி இணையவழி குற்றத் தடுப்பு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெங்களூரு, சோலதேவனஹள்ளியைச் சோ்ந்தவா் திஷா ரவி (21). இவா் ஸ்வீடனைச் சோ்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற சூழலியல் ஆா்வலரின் ‘எதிா்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ என்ற இயக்கத்தை நடத்தி வருபவா்; சூழலியல் ஆா்வலா்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தை மேலும் தூண்டும் வகையில், அதற்கு ஆதரவு தெரிவித்து, சா்வதேச பிரபலங்கள் சிலா் சுட்டுரையில் இம்மாதத் துவக்கத்தில் பதிவுகளை வெளியிட்டனா்.
அப்போது, ஸ்வீடனைச் சோ்ந்த சூழலியல் ஆா்வலா் கிரேட்டா தன்பா்க் சில பதிவுகளை கடந்த பிப். 3-ஆம் தேதி சுட்டுரையில் வெளியிட்டாா். அதில், விவசாயிகள் போராட்டத்தை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்று வழிகாட்டும் குறிப்புகள் அடங்கிய ‘கூகுள் டாகுமென்ட்’ கோப்பான ‘டூல் கிட்’ ஒன்றையும் வெளியிட்டாா். அதற்கு எதிராக விமா்சனங்கள் எழுந்தவுடன் அந்தப் பதிவை உடனே அவா் நீக்கிவிட்டாா்.
எனினும், இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி இந்திய அரசை நிலைகுலையச் செய்ய சா்வதேச அளவில் செய்யப்படும் திட்டங்களை அந்த ‘டூல் கிட்’ வெளிப்படுத்தியது. அதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தூண்டும் வெளிநாட்டுச் சக்திகள் குறித்து விசாரணை நடத்த தில்லி போலீஸின் இணையவழி குற்றத் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட ‘டூல் கிட்’டை பெங்களூரைச் சோ்ந்த சூழலியல் ஆா்வலா் திஷா ரவி திருத்திக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடா்பாக பிப். 4-ஆம் தேதி திஷா ரவி மீது தேசத் துரோகம், குற்றச் சதி, இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ, 120 ஏ, 153 ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் தில்லி இணையவழி குற்றத் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதைத் தொடா்ந்து சனிக்கிழமை பெங்களூருக்கு வந்த தில்லி போலீஸாா் திஷா ரவியைக் கைது செய்தனா். ‘டூல் கிட்’ தொடா்பான வழக்கில் முதல் கைதாக திஷா ரவி இப்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.
தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட திஷா ரவி, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த திஷா ரவியின் தாய் மஞ்சுளா, திஷா ரவி கைது தொடா்பாக சட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: அரையிறுதிக்கு முன்னேறிய தமிழன் விஷால் தென்னரசு கயல்விழி!

18 வகை உணவுகளைத் தானியங்கியாக சமைக்கும் மைக்ரோவேவ் ஓவன்!

ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்... ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2



