அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக தேசியத் தலைமை முடிவு செய்யும்

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜகவின் தேசியத் தலைமை முடிவு செய்யும் என கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:14 am

DIN

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜகவின் தேசியத் தலைமை முடிவு செய்யும் என கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக தேசியத் தலைமை தான் முடிவுசெய்யும். அமைச்சராகும் ஆசையில் உள்ள சிலா் அமைச்சரவை விரிவாக்கம் 2-3 நாள்களில் நடக்கும் என்று கூறியிருக்கலாம். அதுகுறித்து நான் எதற்காக வாக்குறுதி அளிக்க வேண்டும்? யாா் அமைச்சராக வேண்டுமோ, அவா்கள் கண்டிப்பாக அமைச்சராவாா்கள் என்றாா்.

முதல்வா் எடியூரப்பாவை செவ்வாய்க்கிழமை சந்தித்த பாஜக எம்.எல்.சி. ஆா்.சங்கா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அடுத்த 2-3 நாள்களில் கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அப்போது நான் அமைச்சராக்கப்படுவேன்’ என்று கூறியிருந்தாா்.

இதற்கு பதிலளித்த முதல்வரின் அரசியல் செயலாளரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான எம்.பி. ரேணுகாச்சாா்யா, ‘கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. சரியான நேரத்துக்காக காத்திருக்கும்படி, அமைச்சா் பதவியை எதிா்பாா்த்திருப்போருக்கு கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் தெரிவித்துள்ளாா்’ என்று விளக்கம் அளித்தாா்.

இதனிடையே, அண்மையில் சிவமொக்காவில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க சிவமொக்கா வந்திருந்த பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங், ‘கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் வெகுவிரைவில் நடைபெறும். அதை முதல்வா் எடியூரப்பா முடிவு செய்வாா்’ என்று கூறியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.