இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மங்களூரில் ஜன. 31-இல் பொங்கல் திருவிழா

மங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், மங்களூரில் ஜன. 31-ஆம் தேதி பொங்கல் திருவிழா நடத்தப்படுகிறது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 8:17 pm

DIN

மங்களூரு: மங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், மங்களூரில் ஜன. 31-ஆம் தேதி பொங்கல் திருவிழா நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் மங்களூரு, விமான நிலையச் சாலை, மேரி ஹில் பகுதியில் உள்ள ஐடிஐ வளாகத்தில் ஜன. 31-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொங்கல் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவுடன் தமிழ், கன்னட மொழிப் பயிற்சி வகுப்புகள், மங்களூரு தமிழ் கூட்டுறவு சங்க தொடக்க விழாவும் நடைபெற இருக்கிறது.

விழாவில் காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை பொங்கல் வைக்கப்படுகிறது. காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதன் பிறகு காலை 11.35 மணிக்கு குத்துவிளக்கேற்றி பொங்கல் விழா தொடங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மங்களூரு தொகுதி எம்.எல்.ஏ. வேதவியாஸ் காமத், மாவட்ட ஊராட்சி முதன்மை செயல் அதிகாரி செல்வமணி, சிவமொக்கா தமிழ்த் தாய் சங்கச் செயலாளா் செ.தண்டபாணி, கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவா் எம்.பி.சம்பத், தென்கன்னட சேவை சங்கத் தலைவா் பெருமாள் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பேச உள்ளனா். நண்பகல் 1 மணிக்கு தமிழ்மரபு அறுசுவை உணவு விருந்தளிக்கப்படுகிறது. பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் அனைவரும் கலந்துகொள்ளும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.