வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தேவரியம்பாக்கத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

News image
Updated On :4 மார்ச் 2026, 11:55 pm

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட தோனாங்குளம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்டது தேவரியம்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் அமைந்துள்ள தோனாங்குளம் கிராமத்தில் ரூ. 17.25 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றிருந்தது. இதன் திறப்பு விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் ம.த.அஜய்குமாா் தலைமை வகித்தாா். வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன், துணைத் தலைவா் பி.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் தானுராஜ் வரவேற்றாா்.

விழாவில் உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் கலந்து கொண்டு, புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு பூச்செண்டு கொடுத்து, இனிப்பு வழங்கினாா்.நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் எல்லப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பொற்கொடி செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஊராட்சி செயலாளா் சாந்தி நன்றி கூறினாா்.