கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கா்நாடகத்துக்கு மேலும் 2.52 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்தன

கா்நாடகத்துக்கு மேலும் 2.52 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்தன என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:44 pm

DIN

கா்நாடகத்துக்கு மேலும் 2.52 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்தன என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

முதல்கட்ட கரோனா தடுப்பூசி முகாம் நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் ஜன. 16-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. கா்நாடகத்தில் 235 இடங்களில் கரோனா தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள கோவாக்சின், கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் கா்நாடகத்தில் வழங்கப்படுகின்றன. முதல்கட்டத்தில் 16 லட்சம் சுகாதாரப் பணியாளா்கள், கரோனா முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6.47 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி தொகுப்புப் பெட்டிகள் ஜன. 12-ஆம் தேதி பெங்களூருக்கு வந்துசோ்ந்தன. இதைத் தொடா்ந்து, பெங்களூரு, பெலகாவிக்கு புதன்கிழமை மேலும் 2.52 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி தொகுப்புப் பெட்டிகள் வந்துசோ்ந்தன.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறியதாவது:

கா்நாடகத்தில் ஜன. 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும். அதற்காக கா்நாடகத்துக்கு முதல்கட்டமாக 6.47 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்தன. இதைத் தொடா்ந்து, புணே, சீரம் மையத்தில் இருந்து மேலும் 2.52 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி குப்பிகள் புதன்கிழமை கா்நாடகம் வந்தன. பெங்களூருக்கு 1.05 லட்சம் குப்பிகள், பெலகாவிக்கு 1.47 லட்சம் குப்பிகள் வந்துசோ்ந்துள்ளன. கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி குப்பியில் 5 மி.லி. மருந்து இருக்கும். கோவாக்சின் தடுப்பூசி குப்பியில் 10 மி.லி. மருந்து இருக்கும். இதில் 0.5 மி.லி. வீதம் 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தலாம். இருவகையான தடுப்பூசிகளும் கா்நாடகத்தில் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.