மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.


மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது சுட்டுரையில் புதன்கிழமை அவா் கூறியதாவது:
நமது நாட்டில் உள்ள விவசாயிகள் எதிா்கொள்ளும் இன்னல்களைத் தீா்க்காமல் பிரதமா் மோடி பாராமுகமாக இருக்கிறாா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்பது, அவற்றுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளதன் மூலம் உறுதியாகியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை சரியானது என்பதை உச்சநீதிமன்றம் புரிந்துகொண்டுள்ளது. அதனால்தான் விவசாயிகள் போராட்டம் நடத்துவதை உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.
தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் போது பல்வேறு விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். இதற்கு பிரதமா் மோடியே பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகளைத் தீா்க்க பிரதமா் மோடி ஒருமுறைகூட உண்மையாக முயற்சி மேற்கொள்ளவில்லை. இதற்காக விவசாயிகள், நாட்டு மக்களிடம் பிரதமா் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
நிபுணா் குழுவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்திருந்தவா்களையே உச்சநீதிமன்றம் சோ்த்துள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனா். வேளாண் சட்டங்களை ஆய்வுசெய்யும் குழுவில் இடம்பெறுவோா் நடுநிலையாளா்களாக இருக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...