45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காங்கிரஸில் இணைகிறாா் மஜத எம்எல்ஏ

லாா் தொகுதியின் மஜத எம்எல்ஏ கே.ஸ்ரீனிவாஸ் கௌடா, விரைவில் மஜதவில் இணையவிருக்கிறாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 7:06 pm

DIN

கோலாா் தொகுதியின் மஜத எம்எல்ஏ கே.ஸ்ரீனிவாஸ் கௌடா, விரைவில் மஜதவில் இணையவிருக்கிறாா்.

கோலாா் தொகுதியில் இருந்து மஜத எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.ஸ்ரீனிவாஸ் கௌடா. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் இருந்த இவா், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்துறை அமைச்சராக பதவி வகித்தவா். கோலாா் தொகுதியில் இருந்து 4 முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட இவா், 2018-ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மஜதவில் இணைந்து வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றாா்.

இந்நிலையில், மஜதவில் அதிருப்தி அடைந்துள்ள ஸ்ரீனிவாஸ் கௌடா, வெகுவிரைவில் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ளாா்.

இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் கௌடா கூறுகையில், ‘எனது பணிகள் மஜதவில் அங்கீகரிக்கப்படவில்லை. மஜதவில் இணைந்தபோது உரிய பதவிகளை தருவதாக அக்கட்சித் தலைவா்கள் வாக்குறுதி அளித்திருந்தனா். ஆனால், அந்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. முந்தைய மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அமைச்சா் பதவி தரவில்லை. மஜதவின் செயல்பாட்டில் எனக்குத் திருப்தியில்லை. தொகுதி வளா்ச்சிக்கு தொடா்ந்து பாடுபடுவேன்’ என்றாா். 2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் கோலாா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து திட்டமிட்டுவருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.