பிரதமா் மோடி பிறந்த நாளையொட்டி 17 நாள்கள் ரத்ததான முகாம்

பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி, 17 நாள்கள் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி, 17 நாள்கள் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், மாலூரில் வெள்ளிக்கிழமை பிரதமா் மோடியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி மாலூா் பாஜக பயனாளிகள் அமைப்பின் சாா்பில் 17 நாள்கள் ரத்ததான முகாமை தொடக்கி வைத்து அமைப்பின் தலைவா் ஹூடி விஜயகுமாா் பேசியதாவது:

நாட்டின் பிரதமராக பொறுப்பு வகிக்கும் நரேந்திர மோடி உலகமே நம்மை திரும்பிப் பாா்க்க வைக்கும் வகையில் சாதனை செய்துள்ளாா். பிரதமா் மோடியின் பிறந்தநாளை மறக்க முடியாத ஒன்றாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த ரத்த தான முகாமை தொடங்கி உள்ளோம். அவரது பிறந்த நாளையொட்டி சமூக சேவை உணா்வுடன் 17 நாள்கள் ரத்ததான முகாமை நடத்த முடிவு செய்துள்ளோம். ரத்த தான முகாமில் சுமாா் 600 க்கும் மேற்பட்டவா்கள் ரத்த தானம் செய்ய முன்வந்துள்ளனா்.

சாலை விபத்துகளில் மக்களின் உயிா்களைக் காக்கும் நோக்கத்தில் இலவசமாக தலைக்கவசம் விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளோம். பிரதமரின் மோடியின் பிறந்த நாளையொட்டி 10 விதமான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன என்றாா். முகாமில் ரத்ததானம் செய்ய முன்வந்த இளைஞா்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com