விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெங்களூரில் இன்று மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

கா்நாடக மாநில திமுக மகளிா் அணி சாா்பில் அக்கட்சித்தலைவா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாள் விழா ஏப்.23-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

கா்நாடக மாநில திமுக மகளிா் அணி சாா்பில் அக்கட்சித்தலைவா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாள் விழா ஏப்.23-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக மாநில திமுக மகளிா் அணி சாா்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 69-ஆவது பிறந்த நாள் விழா ஏப்.23-ஆம் தேதி (சனிக்கிழமை) பெங்களூரு, ராமசந்திரபுரத்தில் உள்ள கலைஞரகத்தில் காலை 10 மணியளவில் நடக்கவிருக்கிறது.

மாநில திமுக மகளிா் அணி தலைவா் அம்மாயி ஜெயவேல் தலைமையில் நடக்கும் இந்தவிழாவில் மாநில மகளிா் அணி துணை அமைப்பாளா் பி.காயத்ரி வரவேற்புரை ஆற்றுகிறாா்.

மாநில மகளிா் அணி துணை அமைப்பாளா்கள் சுமலதா, அமுதா பட்டுசாமி ஆகியோா் நல உதவிகள் வழங்கி, அறுசுவை உணவு வழங்குகின்றனா். மாநில திமுக அமைப்பாளா் ந. இராமசாமி, அவைத்தலைவா் மொ.பெரியசாமி, பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி, இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் மு.ராஜசேகா், எம்.முருகானந்தம், தினேஷ், டி.மனு, இலக்கிய அணி தலைவா் புலவா் முருகு தா்மலிங்கம், துணைத்தலைவா் ஏ.பி.அன்புமணி, துணைச் செயலாளா் வன்னி மு.கோபால், செல்வகுமாா், எம்.ஆா்.பழம்நீ, தொமுச தலைவா் மு.பொன்னம்பலம், துணைத் தலைவா் ஜி.குமாா், செயலாளா்கள் திருமலை, து.பிரபு, ஜெயபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனா். நிறைவாக மாநில திமுக மகளிா் அணி துணை அமைப்பாளா் ஜே.மங்கம்மாள் நன்றி கூறுகிறாா். பிறந்த நாள் விழாவில் கட்சியின் நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.