ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

4000 கி.மீ.-க்கு அப்பால்... அமெரிக்க - பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்கிய ஈரான்!

அமெரிக்க - பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பற்றி...

ஏவுகணைத் தாக்குதல் - கோப்புப் படம்

Published On :

அமெரிக்க - பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து இரு ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியா என்கிற தீவு அமைந்துள்ளது. பிரிட்டன் வசம் உள்ள இந்தத் தீவில் ஈரானுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவப் படையை நிலைநிறுத்த பிரிட்டன் அனுமதித்தது.

இங்குள்ள அமெரிக்க - பிரிட்டன் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தியதாக நேற்று (மார்ச் 20) செய்திகள் வெளியாகின.

ஈரான் எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 4000 கி.மீ.-க்கு அப்பால் உள்ள தீவில் தாக்குதல் நடத்த முயற்சி செய்த நிலையில் இரு ஏவுகணைகளும் இலக்கைத் தாக்கவில்லை. ஆனால், இவ்வளவு அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் ஈரானிடம் இருப்பது இந்தச் சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

ஒரு ஏவுகணை ஏவிய பின்னர் செயலிழந்த நிலையில், மற்றொரு ஏவுகணை அமெரிக்கப் போர்கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட இடைமறித்து தாக்கும் ஏவுகணையால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

ஆனால், அமெரிக்க அரசு இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

ஆசியா சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கியத் தளமாக இந்தத் தீவைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா அங்கு குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தும் விமானங்கள் மற்றும் பல போர் உபகரணங்களை நிலைநிறுத்தியுள்ளது.

1960-களில் இருந்து தனது வசம் வைத்திருந்த சாகோஸ் தீவுகளை பிரிட்டன் அரசு மொரீஷியசுக்கு திருப்பி அளிக்க ஒப்புக்கொண்டது. மேலும், இந்தத் தீவுகளில் மிகப்பெரியதான டியாகோ கார்சியாவை ஒப்பந்த முறையில் தற்போது பிரிட்டன் பயன்படுத்துகின்றது. இந்த முடிவுக்கு டிரம்ப் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran targets US-UK base 4,000 km away in Diego Garcia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.