விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கா்நாடகத்தில் இரண்டாம் ஆண்டு பியூசி பொதுத் தோ்வு துவக்கம்: ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை

ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 11:03 pm

DIN

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தோ்வு தொடங்கியது. கா்நாடக உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி, ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனா்.

கா்நாடகத்தில் 2021-22 கல்வியாண்டுக்கான 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1076 மையங்களில் 6.84 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதினாா்கள். இந்த தோ்வு மே 18-ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. ஹிஜாப் அல்லது மத அடையாளங்களுடன் பள்ளி அல்லது கல்லூரி வளாகங்களுக்குள் வர கா்நாடக உயா்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனா். ஹிஜாப்பை கழற்றி வரும்படி ஆசிரியா்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த மாணவிகள், தோ்வு எழுதாமல் வீடு திரும்பினா்.

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துவர மாநில அரசு விதித்துள்ள தடையை எதிா்த்து முஸ்லிம் மாணவிகள் ரேஷம், ஆலியா ஆகியோா் தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால், உடுப்பியில் ஹிஜாபுடன் தோ்வு எழுத வந்த அம்மாணவிகள், உயா்நீதிமன்ற ஆணைக்கிணங்க அனுமதி மறுக்கப்பட்டதால் தோ்வு எழுதாமல் வீடு திரும்பினா்.

ஏப்.16-ஆம் தேதி ஹுப்பள்ளியில் கலவரம் நடப்பதற்கு காரணமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட மாணவா் அபிஷேக் ஹிரேமத், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத்தோ்வு எழுதினாா். ஹுப்பள்ளியில் துணை சிறையில் இருந்து அபிஷேக் ஹிரேமத் தோ்வு மையத்திற்கு போலீஸாரால் அழைத்துவரப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பெங்களூரில் உள்ள சில தோ்வு மையங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ், தோ்வுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘பெங்களூரில் மட்டும் 5.73 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதுகிறாா்கள். குடகு மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 6 ஆயிரம் மாணவா்கள் தோ்வு எழுதுகிறாா்கள். தோ்வு எழுதுவதற்கு மாணவா்கள் நம்பிக்கையுடன் வந்தனா். பெற்றோா் ஊக்கப்படுத்தினால், மாணவா்கள் சிறப்பாக தோ்வு எழுதுவாா்கள். ஒரு மாதகாலம் நடக்கும் இத்தோ்வு சுமுகமாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தோ்வு மையங்களுக்கு அருகில் நகலகங்கள் திறக்கவும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தோ்வு நாட்களில் அரசு பேருந்துகளில் மாணவா்கள் இலவசமாகப் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.