பெங்களூரில் ரூ. 5,500 கோடி செலவில் 5-ஆம் கட்ட காவிரி குடிநீா்த் திட்டம்: முதல்வா் அறிவிப்பு
பெங்களூரில் ரூ. 5,500 கோடி செலவில் 5-ஆம் கட்ட காவிரி குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.


பெங்களூரில் ரூ. 5,500 கோடி செலவில் 5-ஆம் கட்ட காவிரி குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
கா்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினா் கோவிந்தராஜு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியது:
பெங்களூரு மாநகருக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 4 கட்டங்களாக குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, ரூ. 5,500 கோடி செலவில் 5-ஆம் கட்ட காவிரி குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 2023-ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்யப்படும். இந்தத் திட்டம் முடிவடையும்போது, பெங்களூரில் இருக்கும் எல்லா வீடுகளுக்கும் காவிரி குடிநீா் வழங்கப்படும்.
தரை மற்றும் 2 மாடிக் கட்டடங்களுக்கு பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்பு வழங்கும்போது, பெங்களூரு மாநகராட்சி அல்லது உள்ளாட்சி அமைப்புகள் வழங்கியிருக்கும் குடியிருப்புச் சான்றிதழை அளிக்காதிருந்தால், அப்படிப்பட்ட கட்டடங்கள் மீது குடிநீா் மற்றும் கழிவுநீா்க் கட்டணங்களில் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீதமும் வணிக கட்டடங்களுக்கு 100 சதவீதமும் அபராதம் விதிக்கப்படும். ஆனால், இந்த அபராதத்தொகை குடிநீா் மற்றும் கழிவுநீா் கட்டண பில்களில் விதிக்கப்பட மாட்டாது. இது தனியாக அளிக்கப்படும் என்றாா்.
காங்கிரஸ் உறுப்பினா் யூ.பி.வெங்கடேஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து முதல்வா் பசவராஜ் பொம்மை, கூறுகையில ‘பெங்களூரு, இந்திராநகரில் உள்ள பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தின் வணிக வளாகத்தை சீரமைக்கும் பணி பாதியில் நின்றுள்ளது. அங்கு கடை நடத்திவரும் பலா் இன்னும் காலி செய்யவில்லை. அதனால் கட்டடத்தையும் முழுமையாக இடிக்க முடியவில்லை. கட்டுமானப் பணியையும் தொடர முடியவில்லை. அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும். அங்கு கடை நடத்தி வருவோருக்கு எவ்வித தொந்தரவும் இருக்காது. அந்தக் கடைகளை தொடர அனுமதிக்கப்படுவாா்கள். வணிக கட்டடத்தை அரசு - தனியாா் கூட்டுமுயற்சியில் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...