/

கணினி வரைகலை கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

 பெங்களூருவில் நடக்கவிருக்கும் கணினி வரைகலை கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :25 மே 2022, 7:32 pm

DIN

 பெங்களூருவில் நடக்கவிருக்கும் கணினி வரைகலை கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக லலித்கலா அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடக லலித்கலா அகாதெமி சாா்பில் பெங்களூருவில் கணினி வரைகலை கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கணினி வரைகலை கண்காட்சியில் பங்கேற்க ஆா்வமுள்ள கணினி வரைகலைக் கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கா்நாடகத்தில் 5 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கணினி வரைகலை ஓவியா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கண்காட்சியில் இடம்பெறும் கணினி வரைகலை ஓவியத்தின் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் அனுப்பிவைக்க வேண்டும். அதை கண்காட்சிக்குழு பரிசீலித்து, தகுதியான ஓவியங்களை தோ்ந்தெடுத்து கண்காட்சியில் பங்கேற்க அனுமதி அளிக்கும். கணினி வரைகலை ஓவியங்கள் 18 அங்குலத்திற்கு 24 அங்குலம் பரப்பில் அமைந்திருக்க வேண்டும். விண்ணப்பப்படிவங்களை அஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூன் 3-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு பதிவாளா், கா்நாடக லலித்கலா அகாதெமி, 2-ஆவது மாடி, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரியில் அல்லது 080-22480297 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில்கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.