பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

போக்சோ வழக்கு: நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு விலக்களித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

எடியூரப்பா மீது போக்சோ வழக்கு: உயா்நீதிமன்றம் சம்மனை ரத்து செய்து உத்தரவு

Updated On :13 ஜூலை 2024, 1:28 am IST

போக்சோ வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு விலக்களித்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, சதாசிவநகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் தாக்கல் செய்திருந்த புகாரில், பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் பிப்.2ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த போது, தனது 17 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தாா்.

அதனடிப்படையில், பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 354ஏ, 204, 214- இன்படி வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி.) மாற்றி மாநில டிஜிபி உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து வழக்கை சிஐடி விசாரித்து வருகிறது. ஜூன் 12 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாததால், எடியூரப்பாவை கைது செய்ய கைது ஆணை பிறப்பிக்குமாறு பெங்களூரில் உள்ள முதலாம் விரைவு நீதிமன்றத்தை புலனாய்வுத் துறை கேட்டுக் கொண்டது. அதன்பேரில், எடியூரப்பாவை கைது செய்ய ஜாமீனில் வெளியே வரமுடியாத ஆணை பிறப்பித்து ஜூன் 13ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன் ஜூன் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய முடியாது. ஆனால், எடியூரப்பாவை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில், ஜூன் 17ஆம் தேதி சிஐடி முன் நேரில் ஆஜரான எடியூரப்பா, 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்தாா். அதன்பிறகு, 700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஜூன் 27ஆம் தேதி சிஐடி தாக்கல் செய்தது. இந்த வழக்கில் எடியூரப்பா தவிர, அவரது உதவியாளா்கள் ஒய்.எம்.அருண், எம்.ருத்ரேஷ், ஜி.மாரிசாமி ஆகியோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டன.

இதனிடையே தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனுவை ஜூன் 28ஆம் தேதி விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித், அரசு தரப்பு ஆட்சேபனையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், அதுவரை எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதித்திருந்த இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன் வெள்ளிக்கிழமை எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்சோ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்திருந்த சம்மனை ரத்து செய்து, ஜூலை 15ஆம் தேதி நேரில் ஆஜராக விலக்களித்து உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.