காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆர்.வி.தேவராஜ் (67) மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை இரவு காலமானார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு சாமராஜ்பேட் தொகுதியில் இருந்து 1989, 1999-ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஆர்.வி. தேவராஜ், 2004-ஆம் ஆண்டு தனது பதவியை எஸ்.எம். கிருஷ்ணாவுக்காக ராஜிநாமா செய்தார். அந்த தேர்தலில் எம்.எஸ். கிருஷ்ணா வெற்றிபெற்றார்.
அதன்பிறகு 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சிக்பேட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஆர்.வி. தேவராஜ்.
பெங்களூரில் இருந்து மைசூரு சென்றிருந்த அவர் திங்கள்கிழமை நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.