சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பேன்: அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

திருத்தணி, அக். 8: தான் வெற்றி பெற்று நகராட்சித் தலைவரானால் திருத்தணி நகரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பேன் என்பது உள்ளிட்ட 15 வாக்குறுதிகளை அதிமுக வேட்பாளர் டி. சௌந்தர்ராஜன் (

Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 am IST

திருத்தணி, அக். 8: தான் வெற்றி பெற்று நகராட்சித் தலைவரானால் திருத்தணி நகரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பேன் என்பது உள்ளிட்ட 15 வாக்குறுதிகளை அதிமுக வேட்பாளர் டி. சௌந்தர்ராஜன் (படம்) அளித்துள்ளார்.

 திருத்தணி நகராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் நகர செயலர் டி. சௌந்தர்ராஜன் போட்டியிடுகிறார்.

 இவர் நகராட்சிக்கு உள்பட்ட 21 வார்டுகளிலும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து வாக்குறுதிகளை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் வெற்றி பெற்றால் எந்த நேரமும் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் என்னைச் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்.

 நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளுக்கும் தினமும் அருங்குளம் குசஸ்தலை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க ஆவண செய்யப்படும். நகரில் குடிநீர் கிடைக்காத பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 திருப்பாற்கடல் கூட்டு குடிநீர் திட்டத்தை திருத்தணி நகருக்கு கொண்டுவர முயற்சி எடுப்பேன். திருத்தணி அண்ணா பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த முயற்சி எடுக்கப்படும். பஸ் நிலையத்தில் புதிதாக பயணிகள் தங்கும் விடுதி அமைக்கப்படும். திருத்தணியில் இருந்து சென்னைக்கு கூடுதல் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 திருத்தணி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலமரம் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஏற்பாடு செய்யப்படும். இளைஞர்கள் விளையாடுவதற்கு அனைத்து வசதிகள் கொண்ட விளையாட்டு பயிற்சி கூடம் அமைக்கப்படும்.

 திருத்தணி நகர மாணவ, மாணவிகளின் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும். வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு திருத்தணி நகர இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.