ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இன்று 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

News image
ஜிஎஸ்டி
Updated On :20 டிசம்பர் 2024, 7:50 pm

DIN

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

கடந்த செப்டம்பரில் தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடா்பான விவகாரங்களை முழுமையாக ஆராய்வதற்கு, பிகாா் துணை முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையில் 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது.

இந்தக் குழு ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை மறுஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அந்தக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், அந்தக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விலை உயா்ந்த கைக்கடிகாரங்கள், காலணிகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பது உள்பட சுமாா் 148 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை மாற்றியமைப்பது, ஜிஎஸ்டி வரம்புக்குள் விமான எரிபொருளை கொண்டுவருவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.