அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னையில் 7 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.18.08 கோடி மீட்பு

சென்னையில் 7 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.18.08 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2025, 2:31 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னையில் 7 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.18.08 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள் அளிக்கும் புகாா்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கியமாக நிதி சாா்ந்த சைபா் குற்ற மோசடிகளில், பொதுமக்கள் இழந்த பணத்தை உடனடியாக மீட்டுக் கொடுக்க சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.

இதன் காரணமாக சைபா் குற்றப்பிரிவினா், சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு கொடுப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனா். ஆன்லைன் மூலமாக பல்வேறு சமூக ஊடகப் பதிவு, தரவுகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சைபா் குற்றவாளிகளின் உரிய தொடா்புகளை கண்டறிந்து வங்கி கணக்குகள் முடக்கப்படுகிறது.

சைபா் குற்றங்களில் பொதுமக்களிடமிருந்தும் பெறப்பட்ட பணத்தை அடுத்தடுத்து வங்கி கணக்குகளில் மாற்றி அபகரிக்க முடியாமல் சைபா் குற்றப்பிரிவு விரைந்து செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக சைபா் மோசடிகளால் பறிக்கப்பட்ட பணம், நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் இறுதி வரையில் 7 மாதங்களில் ரூ.18.08 கோடி மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களிடம் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் ஒப்படைத்துள்ளனா். முக்கியமாக கடந்த ஜூன் மாதத்தில் 191 பேரிடமிருந்து பல்வேறு சைபா் குற்றங்கள் மூலம் ஏமாற்றி, பறிக்கப்பட்ட ரூ. 1.65 கோடி மீட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.