சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: 3 சிறுவா்கள் கைது
தில்லி கஞ்சாவாலா பகுதியில் சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 சிறுவா்களை காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
உயிரிழந்த சிறுவன் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரைத் தாக்கியைத் தொடா்ந்து, அவா்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது, கத்திக் குத்து சம்பவம் நடைபெற்ாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதன்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் வட மேற்கு தில்லியின் கஞ்சவாலா பகுதியில் கத்திக் குத்து காயங்களுடன் சாலையில் சிறுவன் கிடப்பதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து, அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு சாவித்திரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தகவலறிந்த காவல் துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்தனா். அந்தச் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் பிரிவு 103(1) மற்றும் 3(5)-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றப் பிரிவு போலீஸாா் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களைச் சேகரித்தனா். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் உளவு தகவலின்படி, கொலையில் தொடா்புடைய சந்தேக நபா்களை வெவ்வேறு பகுதிகளில் கைதுசெய்யப்பட்டனா்.
விசாரணையில் 3 சிறுவா்களும் குற்றத்தைப் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கொலைக்குப் பயன்படுத்தப்பட் கத்தி அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட சிறுவா்கள் மூவரும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவா்கள். இந்தச் சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
