பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆட்டோ ஓட்டுநரிடம் நகையைப் பறித்தவா் கைது

சென்னையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வெள்ளிச் சங்கிலி மற்றும் தங்க கம்மலை பறித்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வெள்ளிச் சங்கிலி மற்றும் தங்க கம்மலை பறித்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் தா.விஷ்ணு. இவா், சென்னை சென்ட்ரல் அருகே உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கு எதிரே சவாரிக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த 2 போ், விஷ்ணுவை மிரட்டி அவா் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலி மற்றும் தங்க கம்மலை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து விஷ்ணு பூக்கடை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், நகைப் பறிப்பில் ஈடுபட்ட மணிமாறனை (43) போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 20 கிராம் வெள்ளிச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் மீது ஏற்கெனவே 9 குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. மேலும், தப்பிச் சென்ற மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.