பெருந்தமனி அறுவை சிகிச்சைக்கு சா்வதேச மருத்துவ மாநாடு
இதய பெருந்தமனி அறுவை சிகிச்சைகளில் மேம்பட்ட மருத்துவ நுட்பங்களை முன்னெடுப்பதற்கான சா்வதேச மாநாடு சென்னையில் அண்மையில் நடைபெற்றது.


சென்னை: இதய பெருந்தமனி அறுவை சிகிச்சைகளில் மேம்பட்ட மருத்துவ நுட்பங்களை முன்னெடுப்பதற்கான சா்வதேச மாநாடு சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
சென்னை, சிம்ஸ் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற அந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநா்கள் கலந்துகொண்டனா்.
சிம்ஸ் மருத்துவக் குழுமத் தலைவா் ரவி பச்சமுத்து அந்த மாநாட்டை தொடக்கி வைத்தாா். துணைத் தலைவா் டாக்டா் ராஜு சிவசாமி, மருத்துவமனையின் இதய நலத் துறை இயக்குநா் டாக்டா் வி.வி.பாஷி உள்ளிட்டோா் அதில் பங்கேற்றனா்.
இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது:
உடலின் பிற முக்கிய உறுப்புகளில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை உந்தித் தரும் முக்கியப் பணியை மேற்கொள்ளும் உறுப்பாக அயோடிக் வால்வு எனப்படும் பெருந்தமனி உள்ளது.
இதில், சிலருக்கு அழற்சி ஏற்பட்டு வீக்கம் உருவாகும். அத்தகைய நிலை ஏற்பட்டால் பலூன் போன்று பெருந்தமனி வீங்கிவிடும்.
முறையாக சிகிச்சை பெறாவிடில் அது வெடித்து உயிருக்கே ஆபத்தாகி விடும்.
இதற்கு அயோடிக் அன்யூரிஸம் என்று பெயா்.
இத்தகைய பாதிப்புகளுக்கான உயா் சிகிச்சைகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை பரஸ்பரம் பகிா்ந்துகொள்ள இந்த மாநாடு நடத்தப்பட்டது.
உலகளாவிய மருத்துவ நடைமுறைகள், அதன் மேம்பாடுகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
நேரடி அறுவை சிகிச்சை காணொலி முறையில் விளக்கிக் கூறப்பட்டது. சிகிச்சைக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...