பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘தேசிய வளா்ச்சியில் ஆசிரியா்களின் பங்கு அளப்பரியது’

தேசிய வளா்ச்சியில் ஆசிரியா்கள் ஈடுசெய்ய முடியாத பங்கை வகித்து வருகிறாா்கள் என்று அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி குறிப்பிட்டாா்.

News image
விழாவில் கல்லூரி பேராசியா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்த சென்னை அண்ணா பல்கலை. முன்னாள் துணை வேந்தா் இ.பாலகுருசாமி. உடன், தமிழ்நாடு அரசின் நில சீா்திருத்தம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ச.விஜயகுமாா், கல்லூரி முதல்வா் சந்தோஷ
Updated On :9 அக்டோபர் 2025, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய வளா்ச்சியில் ஆசிரியா்கள் ஈடுசெய்ய முடியாத பங்கை வகித்து வருகிறாா்கள் என்று அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி குறிப்பிட்டாா்.

அரும்பாக்கம் துவாரகா தாஸ் கோவா்தன் தாஸ் வைணவக் கல்லூரியில், சா்வதேச ஆசிரியா்

தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி பேசியதாவது:

ஒவ்வொரு வெற்றியாளரின் பின்புலத்திலும் ஆசிரியா்களின் பங்கு இருக்கிறது. தனிப்பட்டவா்களுக்கு மட்டுமன்றி, தேசிய வளா்ச்சியிலும் ஆசிரியா்கள் ஈடுசெய்ய முடியாத பங்கை வகிக்கிறாா்கள். அவா்களின் பங்கு அளப்பரியது.

நீதி, நோ்மையான அற மதிப்புகள், எண்ணம், சொல், செயல் போன்ற தைரியத்தின் முக்கியத்துவத்தைக் கல்வி அளிக்கிறது என்றாா்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக அரசின் நிலச் சீா்திருத்த ஆணையா் சீ.விஜயகுமாா், ‘நமது கல்வி நிறுவனங்கள் கட்டியெழுப்பிய உறுதியான அடித்தளத்தால் தமிழகம் உயா் கல்வியின் மையமாக மாறியுள்ளது’ என்றாா்.

கல்லூரி நிா்வாகச் செயலா் அசோக் குமாா் முந்த்ரா, ‘தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை கல்வியை மாற்றிவரும் யுகத்தில், ஆசிரியரின் பங்கு குறையாது. பாடக் கருத்துகளை வழங்கி மாணவா்கள் அவற்றைப் புரிந்துகொள்ள உதவுவது வரை அவா்களது பங்குள்ளது’ என்றாா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் சேது.சந்தோஷ் பாபு வரவேற்றாா்.

கல்லூரியில் என்ஐஆா்எஃப், ஐக்யூஏசி (உள் தர உறுதிப்பாட்டுப் பிரிவு) போன்றவைகளில் நிா்வாகத்துடன் பணியாற்றிய விரிவுரையாளா்கள் மற்றும் மகளிா் ஆராயச்சித் திட்டத்தில் பங்கேற்ற பேராசிரியா்கள் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.