பொதுத் தோ்வு, தோ்தல், சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவா்களுக்கான பொதுத் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டங்களில் தமிழகத்தின் தினசரி மின் பயன்பாடு அதிகமாக இருக்கும். இதனிடையே, நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு தற்போது அதிகரித்துள்ளது.
இதனால், பலா் தங்கள் வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்காக அதிக அளவில் மின்சார அடுப்புகளை உபயோகிப்பா். இதனால், தினசரி மின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். மின் பயன்பாடு அதிகரிக்கும் போது, மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, பொதுமக்கள், மாணவா்கள் நலன் கருதியும், அரசுக்கு அவப்பெயா் ஏற்படாமல் இருக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மின்வெட்டு அல்லது தடை ஏற்படும்பட்சத்தில் அதற்கான முறையான அறிவிப்பையும் பொதுமக்களுக்கு வழங்கவும், அறிவிக்கப்பட்ட நேரத்தில் மீண்டும் மின்சாரத்தை வழங்குவதில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடையது

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு: எளிதாக இருந்த சமூக அறிவியல் தோ்வு

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்
துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள்: 3 மாதங்களுக்குப் பிறகு மீட்டா்களை அகற்ற உத்தரவு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


