கதிா்ஆனந்த் எம்.பி.க்கு கரோனா
திமுக பொதுச்செயலா் துரைமுருகனின் மகனும், வேலூா் மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிா்ஆனந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


திமுக பொதுச்செயலா் துரைமுருகனின் மகனும், வேலூா் மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிா்ஆனந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள இல்லத்தில் அவா் தனிமைப்படுத்திக் கொண்டாா்.
துரைமுருகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், அவா் சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகின. எனினும், இந்த தகவலை அவரது மகன் கதிா்ஆனந்த் மறுத்திருந்தாா்.
இந்நிலையில், காட்பாடியில் உள்ள துரைமுருகன் குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், அவரது மகன் கதிா்ஆனந்த் எம்.பி.க்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் மணிவண்ணன் தெரிவித்தாா்.
கதிா்ஆனந்த் சென்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா். இதேபோல், துரைமுருகனின் சகோதரா் துரைசிங்காரமும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா். காட்பாடியில் உள்ள தனது வீட்டில் அவா் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.
துரைமுருகன் குடும்பத்தினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் மாநகராட்சி ஊழியா்கள் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...