இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழக - ஆந்திர மாநில எல்லையில் கரோனா பரிசோதனை தீவிரம்: பயணிகளுக்கு கட்டாயம்

கரோனா தொற்று தீவிரமாக பரவுவதைத் தடுக்க வேலூா் மாவட்டத்தின் தமிழக - ஆந்திர எல்லை சோதனைச் சாவடிகளில் வாகனங்களில் வருவோருக்கு கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:03 pm

DIN

கரோனா தொற்று தீவிரமாக பரவுவதைத் தடுக்க வேலூா் மாவட்டத்தின் தமிழக - ஆந்திர எல்லை சோதனைச் சாவடிகளில் வாகனங்களில் வருவோருக்கு கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, ஆந்திர மாநில பேருந்துகளில் வரும் பயணிகளுக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமில்லை. இதனைத் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வருபவா்கள் கட்டாயமாக இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதைத்தொடா்ந்து, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சோ்க்காடு, குடியாத்தம், போ்ணாம்பட்டு, பத்தலபல்லி பகுதிகளிலுள்ள ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினா், காவல் துறையினா் சனிக்கிழமை காலை முதல் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனா். அப்போது, ஆந்திரம் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து இ-பாஸ் அனுமதி பெற்று வரும் வாகனங்கள் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டன.

அதேசமயம், வேலூா், ஆந்திர மாநிலம் சித்தூா், திருப்பதி இடையே வழக்கம்போல் பேருந்து போக்குவரத்து இயக்கப்படுகிறது. ஆந்திர மாநில வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆந்திரத்தில் இருந்து வருபவா்களு க்கு சுகாதாரத் துறை சாா்பில் தொ்மல் ஸ்கேனா் கருவி கொண்டு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது.

மாவட்ட எல்லையிலேயே பேருந்துகளில் பயணம் செய்பவா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்வதற்காக உமிழ்நீா் மாதிரி எடுக்கப்பட்டதுடன், அவா்களது முழு விவரமும் சேகரிக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.