பாராட்டு பெற்ற மருத்துவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டு, அதற்காக பாராட்டுச் சான்றிதழ்


செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டு, அதற்காக பாராட்டுச் சான்றிதழ் பெற்ற மருத்துவா்கள், மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட மருத்துவா்களுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
அதன்படி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பொது மருத்துவா் செல்வராஜ், எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரி இதய நோய் நிபுணா் மரு.தண்டபாணி ஆகியோா் மருத்துவா் தின கருத்தரங்கில் பாராட்டப்பட்டு, சான்றிதழ் பெற்றனா்.
இதையடுத்து, மருத்துவா்கள் இருவரும் வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியரகம் வந்து ஆட்சியா் ராகுல் நாத் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
நிகழ்வின் போது, இணை இயக்குநா் (சுகாதாரப் பணி) மரு.ரமாமணி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அனிதா, முதல்வா் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலா் மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...