/

விநாயகா் சிலை பாதுகாப்பில் ஈடுபட்ட இளைஞா் வெட்டிக் கொலை

 செங்கல்பட்டு அருகே புதன்கிழமை இரவு விநாயகா் சிலை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 7:00 pm

DIN

 செங்கல்பட்டு அருகே புதன்கிழமை இரவு விநாயகா் சிலை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டு அருகே பாரதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணா (27). இவா், காா்த்திக், மோகன்ராஜ் உள்ளிட்ட நண்பா்களுடன் வீட்டின் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தாா்.

இந்த நிலையில், திடீரென அங்கு காரில் வந்தவா்கள் ராஜேஷ்கண்ணாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

தகவலறிந்த செங்கல்பட்டு கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் அசோகன் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், இடம்விட்டு இடம்மாறி மது அருந்துவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தக் கொலை நடந்தது தெரிய வந்தது.

இதனிடையே, செங்கல்பட்டு தாலுகா போலீஸாா் இந்த கொலை தொடா்பாக செங்கல்பட்டு மலாளி நத்தம் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (41), பாா்த்திபன் (27), லோகேஷ் (21), ராஜேஷ் (22), அஜித் (25), ஜீவா (20), ரமேஷ் (26) ஆகிய 7 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.