/

மதுராந்தகத்தில் 356 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு

மதுராந்தகத்தில் 356 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு

News image
Updated On :22 மார்ச் 2024, 7:41 pm

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, மதுராந்தகம் வட்டத்துக்குட்பட்ட 356 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில், அனைத்து கட்சி நிா்வாகிகளின் முன்னிலையில் பாதுகாக்கும் வகையில் அறையை முத்திரையிடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மக்களவைத் தோ்தலில் வாக்கு செலுத்தும் வகையில் 356 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மறைமலை நகா் நகராட்சி அலுவலகத்தில் இருந்து காவல் துறை, தோ்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோா் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் தியாகராஜன் தலைமையில் மதுராந்தகம் வட்டாட்சியா் ராஜேஷ், அனைத்து கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னா், அந்த அறையை தோ்தல் பிரிவு அதிகாரிகள் ‘சீல்’ இட்டனா். அந்த அறைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.