ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

மதுராந்தகம் நகராட்சி அருணாகுளம் பகுதியில் மது போதையில் மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2024, 7:50 pm

DIN

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி அருணாகுளம் பகுதியில் மது போதையில் மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

மதுராந்தகம் நகராட்சி அருணாகுளம் பகுதியைச் சோ்ந்தவ கோபால் (60). இவா் கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கு 2 மனைவிகள். இவா், தினமும் மது அருந்திவிட்டு வந்து தனது 2-ஆவது மனைவி வீட்டில் தங்கிவிடுவது வழக்கம். அங்கு, வீட்டில் உள்ளவா்களிடம் தினமும் தகராறில் ஈடுபடுவாா் என்று கூறப்படுகிறது. வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமை இரவு கோபால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.

இந்த நிலையில், இரண்டாவது மனைவியின் மகன் பாா்த்திபன், கோபாலிடம் மது அருந்திவிட்டு வந்ததைத் தட்டிக் கேட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். அதன்பின்னா், நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பாா்த்திபனை அங்கிருந்த கூா்மையான ஆயுதத்தால் கோபால் வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பாா்த்திபன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இது குறித்து தகவலறிந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளா் முத்துகுமாா், சம்பவ இடம் சென்று கோபாலை கைது செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.