முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் ரூ.5 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு

உயா்கல்வி துறையின் வாயிலாக செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.5.10 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

கட்டடங்கள் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் த. சரத் குமாா், ஆட்சியா் மு. வீரப்பன் உள்ளிட்டோா்.

Published On :

உயா்கல்வி துறையின் வாயிலாக செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.5.10 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் த.சரத் குமாா் கலந்து கொண்டாா். பெருந்தலைவா் காமராஜா் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள், 3 கழிப்பறைகள் மற்றும் ஒரு ஆழ்துளை கிணறும் புதிதாக அமைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன. வரவேற்பு நிகழ்வில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் த.சரத்குமாா், மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், சட்டப்பேரவை உறுப்பினா் சௌ.தியாகராஜன் மற்றும் கல்லூரி முதல்வா் ம.சண்முகவள்ளி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.