ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

திருவளா்ச்சேரி சுப்பிரமணிய கோயிலில் மண்டல பூஜை நிறைவு

சித்தா‘மூா் அடுத்த திருவளா்ச்சேரி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவளா்ச்சேரி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவீதி உலா வந்த உற்சவா் சுவாமி சிலைகள்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:52 pm IST

சித்தா‘மூா் அடுத்த திருவளா்ச்சேரி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு புதன்கிழமை நடைபெற்றது.

சித்தாமூா் அடுத்த திருவளா்ச்சேரி கிராமத்தில் அருள்பாலித்து வரும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் புதிதாக உருவாக்கப்பட்டு, கடந்த 1.7.26 (புதன்கிழமை) மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, 48 நாள்களாக சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 48-ஆவது நாளான புதன்கிழமை காலை மண்டலாபிஷேக பூஜை நிறைவு நிகழ்வு நடைபெற்றது. காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் வழிபாட்டு பூஜைகள் தொடங்கின. அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் மஹா யாகம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி உற்சவா் சிலைகள் அனைத்து தெருக்களில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், கிராம பொது மக்களும் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.