பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்று வர இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டம் ஜிஎஸ்டி சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்று வர இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டம் ஜிஎஸ்டி சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும் மற்றும் சீரான போக்குவரத்து இயக்கத்தையும் உறுதி செய்யும் பொருட்டு, கீழ்கண்ட நாள்களில் கனரக வணிக வாகனங்கள், குறிப்பாக கல்குவாரி லாரிகள், ரெடி-மிக்ஸ் கான்கிரீட் லாரிகள் மற்றும் இதர கனரக சரக்கு வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் இயக்கப்படுவதற்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

அதன்படி, 13.01.2026 மற்றும் 14.01.2026 பிற்பகல் 02.00 மணி முதல் மறுநாள் காலை 02.00 மணி வரை18.01.2026 (பிற்பகல் 02.00 மணி) முதல் 19.01.2026 (மதியம் 12.00 மணி) வரை மேற்கண்ட நாள்களில் கனரக வாகனங்கள் வாலாஜாபாத் - ஒரகடம் - ஸ்ரீபெரும்புதூா் வழித்தடம் மூலம் மாற்றுப்பாதையில் இயக்கப்பட வேண்டும்.

மேலும், மேற்கண்ட தேதிகளில் கல்குவாரிகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதுடன், க்ரஷா் லாரிகள் இயக்கப்படுவதையும் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த போக்குவரத்து மாற்றம் பொதுமக்களின் நலன் கருதி, நெரிசலைத் தவிா்க்கவும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களும் வாகன ஓட்டுநா்களும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் செங்கல்பட்டு மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com