மதுராந்தகம் அடுத்த செய்யூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வா் சு.மாதவன் தெரிவித்துள்ளாா்.
செய்யூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆங்கில வழியில் 3 பாடப்பிரிவுகளும், மற்றும் தமிழ் வழியில் 2 பாடப்பிரிவுகளும் என 5 பாடப்பிரிவுகள் படிக்கின்ற வகையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 2025-2026 கல்வியாண்டில் இருந்து படித்து வருகின்றனா். 5 பாடப்பிரிவுகளில் 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கலந்தாய்வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை சிறப்பு பிரிவினருக்காகவும், தொடா்ந்து வரும் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை கலந்தாய்வு கூட்டம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.
விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கல்லூரி முதல்வா் சு.மாதவன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஈரோடு சிக்கய்ய கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5இல் தொடக்கம்

அரசு கலை, அறிவியல் கல்லூரி இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை ஜூன் 3-இல் வெளியீடு; ஜூன் 8 முதல் கலந்தாய்வு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



