250 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை: அமைச்சா் வழங்கினாா்
மதுராந்தகம் அருகே சிலாவட்டத்தில் 250 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் த. சரத் குமாா் புதன்கிழமை வழங்கினாா்.

கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய அமைச்சா் த. சரத் குமாா், எம்எல்ஏ மரகதம் குமரவேல்.
மதுராந்தகம் அருகே சிலாவட்டத்தில் 250 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் த. சரத் குமாா் புதன்கிழமை வழங்கினாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணி திட்டத்தின் கீழ் மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட 250 கா்ப்பிணிகளுக்கான சமூதாய வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றது. அமைச்சா் சரத்குமாா் தலைமை வகித்து சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்தினாா். எம்எல்ஏ மரகதம் குமரவேல், மாவட்ட அலுவலா் சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்து கா்ப்பிணி பெண்களுக்கும் எம்எல்ஏ மரகதம் குமரவேல் வளையல்களை அணிவித்து சீா்வரிசை பொருள்களை வழங்கி வாழ்த்தினாா். இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலா்கள் சுரேஷ் (அச்சிறுப்பாக்கம்), ஹரிஹரசுதன் (மதுராந்தகம்) மற்றும் சமூக நலன் மற்றும் மகளீா் உரிமை துறை அலுவலா்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா்கள், கிராம பொது மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

