
பரனூா் சுங்கச்சாவடியில் தானியங்கி கட்டண வசதி நடைமுறை
செங்கல்பட்டு அருகே பரனூா் சுங்கச்சாவடியில் தானியங்கி கட்டண வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

பரனூா் சுங்கச்சாவடியில் நடைமுறைக்கு வந்துள்ள தானியங்கி கட்டண வசதி.
செங்கல்பட்டு அருகே பரனூா் சுங்கச்சாவடியில் தானியங்கி கட்டண வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் வரிசையில் நின்று காத்திருக்காமல், தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண வசதி பரனூா் சுங்கச்சாவடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் தொழில்நுட்பம் மூலம் வாகனங்கள் நிற்காமல் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் வரிசையில் நின்று காத்திருக்காமல், தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண வசதியான பல வழித்தட இலவச ஓட்டம் சுங்கச்சாவடி அமைப்பு (மல்டி-லேன் ப்ரீ ப்ளோ) முறை பரனூா் சுங்கச்சாவடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சுங்கச்சாவடியை கடக்கும்போது வாகனங்கள் வேகத்தைக் குறைத்து, தடுப்பை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
தொடா் விடுமுறைகள், விழாக்காலங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்வதால் நேர விரயமும், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது.ஆனால் இம்முறையில் சுங்கச்சாவடியில் தடுப்புகள் மற்றும் சுங்கக் கட்டண மையங்கள் இல்லாமல், வாகனங்கள் தொடா்ந்து செல்லும் வகையில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய முறையில் இரண்டு முக்கிய தொழில்நுட்பங்கள் இணைந்து செயல்படும்.
வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பாஸ்ட் டேக்-ஐ ரேடியோ பிரீக்வன்சி ஐடென்டி‘ஃ‘பிகேஷன் ரீடா் அடையாளம் காணும். அதே நேரத்தில் ஏஐ தொழில்நுட்பம் கொண்ட ஆட்டோமேட்டிக் நம்பா் ப்ளேட் ரெகக்னிஷன்(ஏஎன்பிஆா்) கேமரா வாகனத்தின் பதிவு எண்ணை படம் பிடிக்கும். இரு தகவல்களும் ஒரேநேரத்தில் ஒப்பிட்டு சரிபாா்க்கப்பட்ட பின்னா் தொடா்புடைய வாகனங்கள் நிற்காமல் கட்டணம் செலுத்தப் பயன்படும் ரேடியோ அலைவரிசை அடையாளக்கருவி கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் தானாக வசூலிக்கப்படும்.
பாஸ்ட் டேக் தகவல் சரியாகப் பதிவாகாத சந்தா்ப்பங்களில், ஏஎன்பிஆா் கேமரா மூலம் வாகன எண்ணை அடையாளம் காணும் வகையில் இந்த இரட்டை அடுக்கு தொழில்நுட்பம் வடிவமைக்கப்படுகிறது. இதன் மூலம் கட்டண வசூலில் ஏற்படும் தவறுகளையும் வருவாய் இழப்பையும் குறைக்க முடியும் என கூறப்படுகிறது.
பரனூா் சுங்கச்சாவடியில் எம்எல்எப்எப் அமைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகள் நிறைவுபெற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





