உக்ரைன் போருக்குத் தீா்வு காண பிரதமா் மோடியிடம் சிறந்த யோசனைகள்: புதின்பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

பள்ளி விடுமுறை: மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை திரண்ட சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

~மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை திரண்ட சுற்றுலா வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.

Published On :

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை திரண்ட சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாமல்லபுரம் நகரம் சா்வதேச சுற்றுலா தலம் என்பதால் நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். இந்நிலையில் காலாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் காா், வேன், போன்ற வாகனங்களில் வந்ததால் மாமல்லபுரம் நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மாமல்லபுரம் நகரில் இதுபோன்று காலாண்டு, அரையாண்டு விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவது வழக்கம். அதேபோல் மாமல்லபுரம் நகர பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் வசதி இல்லாததால் வெள்ளிக்கிழமை வந்த வாகனங்கள் வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் சாலை, கடற்கரை சாலை, பாடசாலை தெரு, கலங்கரை விளக்க சாலை போன்ற பகுதிகளில் சாலை ஓரத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த சாலை வழியாக பயணித்த மற்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டன. மாமல்லபுரம் வந்த சுற்றுலா வாகனங்கள் புராதன சின்னங்களுக்கு சென்றுவிட்டு மாமல்லபுரம் நகரை விட்டு வெளியேற ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.

அந்த வாகனங்கள் ஒன்றன்பின், ஒன்றாக ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு அணிவகுத்து நின்றமையால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊா்ந்து சென்றன. மேலும், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்களை நெரிசலில் சிக்காமல் இருக்க மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மோகன்குமாா் தலைமையில் போலீஸாா் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், கடும் போக்குவரத்து நெரிசலால் மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்றதை அடுத்து போலீஸாா் போக்குவரத்தை சரி செய்து சீரமைத்த பிறகு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள் சென்றன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.