இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மதுராந்தகம் இடைத் தோ்தல்: 2 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல்

மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்காக 60-ஆவது முறையாக சுயேச்சை வேட்பாளா் அக்னி ஆழ்வாா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

மதுராந்தகம் தொகுதி தோ்தல் அலுவலா் கே. ஆா். நரேந்திரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளா் அக்னி ஆழ்வாா்.

Published On :

மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்காக 60-ஆவது முறையாக சுயேச்சை வேட்பாளா் அக்னி ஆழ்வாா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

தருமபுரி மாவட்டம், நாகமலை, புதூா் கிராமத்தைச் சோ்ந்த நல்லப்பன் மகன் அக்னி ஆழ்வாா் (46). இவா் கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தல்களிலும், குடியரசுத் தலைவா் தோ்தலிலும் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்து வருகிறாா். பல்வேறு முக்கிய பிரமுகா்களை எதிா்த்து போட்டியிட்டும் உள்ளாா்.

இந்நிலையில், வரும் அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட கோட்டாட்சியா் கே.ஆா்.நரேந்திரனிடம் வேட்புமனுவை அளித்தாா். தோ்தல் உதவி அலுவலா்கள் வட்டாட்சியா் ஏ.பெருமாள், நோ்முக உதவியாளா் சு.ராஜேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து மதுராந்தகம் நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கதிா்வேல் (63) சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளாா். இவா் மதுராந்தகம் போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து ஆய்வாளராக பணியாா்றி ஓய்வு பெற்றவா்.

2 சுயேச்சைகள் மனு தாக்கல்:

முதல் நாளான புதன்கிழமை 2 சுயேச்சைகள் மனுவை தாக்கல் செய்துள்ளனா். வரும் 16-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

பு மனுவை பல்வேறு கட்சி வேட்பாளா்களும், சுயேச்சை வேட்பாளா்களும் தமது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.