வங்கக் கடலில் உருவாகியுள்ள "மகாசேன்' புயல் வரும் 16 அல்லது 17-ஆம் தேதி வங்கதேசம், மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இப்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. "மகாசேன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் புயல் வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுக்கு இடையில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: "மகாசேன்' புயல் சென்னையில் இருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 800 கி.மீ. தொலைவில் நிலைக் கொண்டுள்ளது. இது இப்போது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இன்னும் சில நாள்களில் இந்தப் புயல் சற்று திசை மாறி, மே 16 அல்லது 17-ஆம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுக்கு இடையில் கரையைக் கடக்கும். இந்தப் புயல் காரணமாக தமிழகத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
மேலும் புயலின் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை சின்னம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி திருப்பத்தூர், கேட்டியில் 30 மி.மீ. மழை பெய்துள்ளது. தேன்கனிக்கோட்டை, உதகை, தளி, அஞ்செட்டி, ஆம்பூர், ஆலங்காயத்தில் 20 மி.மீ. மழையும், கோத்தகிரி, தருமபுரியில் 10 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகம் மற்றும் புதுவையில் திங்கள்கிழமை மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


