இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கல்லூரிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள்: மார்ச் 7-இல் தொடக்கம்

கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை வாக்காளர்களாக சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை வாக்காளர்களாக சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
 நடப்பாண்டில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.20 அன்று வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, வாக்காளர் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 2016 ஜன.1 அன்று 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாகச் சேர்க்க மாவட்ட தேர்தல் அலுவலகம், சென்னை மாநகராட்சி ஆகியவை நடவடிக்கை எடுத்துள்ளன.
 அதன்படி, சென்னையில் உள்ள 30 கல்லூரிகளில் மார்ச் 7 முதல் 11-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு வாக்காளர்கள் சேர்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மேலும், மாணவர்கள் படிவம்-6-ஐ இணையதளம் மூலமாக பூர்த்தி செய்யலாம்.
 முகாம்கள் நடைபெற உள்ள கல்லூரிகள் விவரம்:
 மார்ச்-7: டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி வியாசர்பாடி, கேசிஎஸ் காசி நாடார் கலை, அறிவியல் கல்லூரி-ஆர்.கே.நகர், சர்.தியாகராய கல்லூரி- பழைய வண்ணாரப்பேட்டை, முத்துக்குமார சுவாமி கல்லூரி-கொடுங்கையூர், திருத்தங்கல் நாடார் கல்லூரி- சூசலவாயல், பாரதி பெண்கள் கல்லூரி.
 மார்ச்-8: புதுக்கல்லூரி-ராயப்பேட்டை, மாநிலக் கல்லூரி- சேப்பாக்கம், காயிதே மில்லத் அரசு மகளிர் கலை கல்லூரி-அண்ணாசாலை, ராணி மேரி மகளிர் கல்லூரி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் அறிவியல் கல்லூரி- அண்ணாசாலை, பக்தவச்சலம் மெமோரியல் கல்லூரி-கொரட்டூர்.
 மார்ச்-9: சி.கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி- அண்ணாநகர், டிஜி.வைஷ்ணவ கல்லூரி- அரும்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி- அண்ணாநகர், லயோலா கல்லூரி-நுங்கம்பாக்கம்.
 மார்ச்-10: எம்ஓபி.வைஷ்ணவ கல்லூரி- நுங்கம்பாக்கம், ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா ஆண்கள் கல்லூரி-மயிலாப்பூர், ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி, சென்னை மகளிர் கிறித்துவ கல்லூரி-நுங்கம்பாக்கம், மீனாட்சி மகளிர் கல்லூரி-கோடம்பாக்கம், ஏ.எ.கலை அறிவியல் கல்லூரி-கோயம்பேடு, நந்தனம் ஆண்கள் அரசு கல்லூரி.
 மார்ச்-11: ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் மகளிர் கல்லூரி-தேனாம்பேட்டை, குமார ராணி மீனா முத்தைய்யா கலை, அறிவியல் கல்லூரி-அடையாறு, செயின்ட் லூயிஸ் காதுகேளாதோர் கல்லூரி- அடையாறு, அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி- மேற்கு சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர். ஜானகி கலை,
 அறிவியல் கல்லூரி- அடையாறு, குரு ஸ்ரீ ஷாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.