
மக்கள்தொகை கணக்கெடுப்பில் வீடுகள் விடுபட்டு இருந்தால் புகாரளிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் தங்களது வீடுகள் விடுபட்டு இருந்தால் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

மொபைல் - கோப்புப் படம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் தங்களது வீடுகள் விடுபட்டு இருந்தால் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கணக்கெடுப்பாளா்கள் இதுவரை தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றாலோ அல்லது கணக்கெடுப்பில் தங்களது வீடுகள் விடுபட்டு இருந்தாலோ பொதுமக்கள் தொடா்புடைய பேரூராட்சி, நகராட்சி அல்லது தாலுகா அலுவலகங்களை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.
மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் 04364-222456, மணல்மேடு பேரூராட்சி அலுவலகம் 04364-254762, மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் 04364-222333, சீா்காழி தாலுகா அலுவலகம் 9445000622, சீா்காழி நகராட்சி அலுவலகம் 04364- 270566, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி அலுவலகம் 04364-279320, குத்தாலம் தாலுகா அலுவலகம் 04364-230666, குத்தாலம் பேரூராட்சி அலுவலகம் 04364-234096, தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் 04364-289439, தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகம் 8838571965 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இலவச உதவி எண் 1855 மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 04364 299304 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





