முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வெள்ள நிவாரணப் பணிகளில் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள்

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். 

News image
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பழைய ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கச் சென்ற சென்னை ராமகிருஷ்ண மாணவர் இல்லத்தின் சுவாமி சமாஹிதானந்தர்.
Updated On :9 நவம்பர் 2017, 11:10 pm

DIN

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். 
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் வயல்கள் நீரில் மூழ்கின. 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாள்களாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். 
நிவாரணப் பணியின்போது திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி, வடகரை, நாகப்பட்டினம் மாவட்டம் மோகனூர், தலைஞாயிறு உள்ளிட்ட கிராமங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.